இந்தோனேஷியாவில் சமீபத்தில் புதிய டொயோட்டா இன்னோவா அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்பவிலை ரூ. 13.64 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனம் சுமார் 2243 கோடி ரூபாயை இந்தோனேஷியாவில் முதலீடு செய்து எம்.வி.பி. எனப்படும் பல்நோக்கு வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்து வருகிறது. இங்கு ஒவ்வொரு 96 வினாடிக்கும் ஒரு புதிய டொயோட்டா இன்னோவா தயாரிக்கப்படுகிறது.
இது பற்றி இந்தோனேஷியா டொயோட்டோ நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு இயக்குநர் நந்தி ஜிலியனடோ கூறுகையில் “இந்தோனேஷியா தொழிற்சாலையில் 96 வினாடிகளுக்கு ஒரு இன்னோவா வாகனம் தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலை முழுமையாக இயங்க ஆரம்பித்தால் 90 வினாடிகளில் ஒரு இன்னோவாவை தயாரிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
புதிய இன்னோவா, டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்களில் வெளிவந்துள்ளது. இதில் டீசல் என்ஜின் 2.4 லிட்டர், பெட்ரோல் 2.0 லிட்டர் அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 ஏர் பேக் பாதுகாப்பு வசதி, 5 கியர்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது