செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அசோக் செல்வன் நடிக்கும் ‘எனக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

அசோக் செல்வன் நடிக்கும் ‘எனக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

1 minutes read

பட மாளிகை, டிஜிட்டல் தளம், தொலைக்காட்சி, என திரைப்படத்துறை வணிகம் சார்ந்த சந்தைகளில் தனக்கான வணிக மதிப்பினை உயர்த்திக் கொண்டு வரும் நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் கதை நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எனக்கு தொழில் ரொமான்ஸ்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எனக்கு தொழில் ரொமான்ஸ்’ எனும் திரைப்படத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள் எம். எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், படவா கோபி , விஜய் வரதராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். திருமலை தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இதன் காரணமாக வெளியிடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் உருவாகி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ எனும் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றதாலும் ‘எனக்குத் தொழில் ரொமான்ஸ்’ எனும் திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவை பின்னணியில் உருவாகி இருப்பதாலும் இந்த படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே ஆதரவு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More