இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வேட்பாளர்களுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜா மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர்கலந்துகொண்டனர்.
வன்னி மாவட்டத்தில் இம்முறை தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், ஆசிரியர் கா. திருமகன், சமூகச் செயற்ப்பாட்டாளர் தே. சிவானந்தராசா, ஆசிரியர் பா. கலைதேவன், விரிவுரையாளர் ந. ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ. கமலேஸ்வரன், சட்டத்தரணி செ. டினேசன், சட்டத்துறை மாணவி அந்தோனி டலிமா ஹலிஸ்ரா ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.