செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் ‘சொர்க்க வாசல்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

நடிகர் ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் ‘சொர்க்க வாசல்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

1 minutes read

தொகுப்பாளரும், துடுப்பாட்ட வர்ணனையாளரும் , நடிகரும் , இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்க வாசல்’ எனும் திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி, செல்வ ராகவன், நட்டி என்கிற நட்ராஜ், சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ஜான்சன், மவுரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சிறைச்சாலை மற்றும் சிறை கைதிகளின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் தயாராகும் இந்த திரைப்படம் அவரது நடிப்பில் உருவான படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான படம் இது என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  இந்நிலையில் இப்படத்தில் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் சிறைச்சாலையில் கைதிகளின் வாழ்வியலும், உறவுகளும், தொடர்புகளும் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More