யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி, கேணியடி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி சிறிராகுலன் (வயது 79) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் நேற்று சனிக்கிழமை டெங்கு ஒழிப்பு கள தரிசிப்புகளை மேற்கொண்டனர்.
அதன்போது மேற்படி வயோதிபரின் வீட்டுக்குச் சென்றபோது வீட்டினுள் சைக்கிள் மீது விழுந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர்கள் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூற்றுப் பரிசோதனையின்போது மாரடைப்பு காரணமாகவே
உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.