செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரியிடம் வழிப்பறி கொள்ளை | முன்னாள் விமானப் படை சிப்பாய் கைது

ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரியிடம் வழிப்பறி கொள்ளை | முன்னாள் விமானப் படை சிப்பாய் கைது

1 minutes read

ஹோமாகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கி நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் முன்னாள் விமானப் படை சிப்பாய்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாவை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் பாதுக்க – அங்கம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய முன்னாள் விமானப் படை சிப்பாய் ஆவார்.

சந்தேக நபர் கடந்த 15 ஆம் திகதி அன்று ஹோமாகம பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள நிலையில் அதே பகுதியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கி மூன்று பவுண் பெறுமதியுடைய நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் பாதுக்க  அங்கம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பல்வேறு பிரதேசங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.