செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எதிர்ப்புக்களையடுத்து சபாநாயகர் இராஜிநாமா!

எதிர்ப்புக்களையடுத்து சபாநாயகர் இராஜிநாமா!

1 minutes read

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இன்று மாலை இராஜிநாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

“கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சினை சமூகத்தில் எழுந்துள்ளது. எனது கல்வித் தகுதி குறித்து நான் இதுவரை எவ்வித பொய்யான அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை.

ஆனால், கல்வித் தகுதியை உறுதிப்படுத்தத் தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும், தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனக்கு கலாநிதி பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்.

எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அரசு  மற்றும் எம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக நான் தற்போதைய சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.” – என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிரணிகள் தீர்மானித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More