செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள்-முதலமைச்சர் ஜெயலலிதாபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள்-முதலமைச்சர் ஜெயலலிதா

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள்-முதலமைச்சர் ஜெயலலிதாபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள்-முதலமைச்சர் ஜெயலலிதா

1 minutes read

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு நிவாரணங்களை அறிவித்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு:-

1. வெள்ளத்தின் காரணமாக நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்களுக்கு ஆவண நகல்களை வழங்குவற்கு 14.12.2015 முதல் இரண்டு வாரங்களுக்கு சிறப்பு முகாம்கள்.

2. வெள்ளத்தால் குடிசைகளை இழந்தவர்களுக்கு 10000 ரூபாய் வெள்ள நிவாரணம், 10 கிலோ அரிசி மற்றும் ஒரு வேட்டி மற்றும் சேலை.

3. நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக்கு உள்ளானோருக்கு 5000 ரூபாய் வெள்ள நிவாரணம், 10 கிலோ அரிசி மற்றும் ஒரு வேட்டி மற்றும் சேலை.

4. வெள்ளத்தால் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு நிரந்தர வீடுகள். உடனடியாக சென்னையில் 10000 குடியிருப்புகள் ஒதுக்கீடு.

5. கால்நடை இழப்பிற்கு 30,000 ரூபாய், ஆடு மற்றும் பன்றி இழப்பிற்கு 3,000 ரூபாய் மற்றும் கோழி இழப்பிற்கு 100 ரூபாய்.

6. 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமுற்ற நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500/- ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410/- ரூபாய்; நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000/- ரூபாய்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.