செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

1 minutes read

தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு அமைத்த மூவர் கண்காணிப்பு குழு, அணை பாதுகாப்பாக உள்ளது என்றும், நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என்றும் கூறியது.

அணையின் நீர்மட்டம் 141 அடியைத் தாண்டியதையடுத்து, கண்காணிப்புக் குழு துணைத்தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை ஆய்வு செய்தனர். அதேசமயம் 142 அடியை எட்டும் நிலையில் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இன்று மாலை அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. வினாடிக்கு 5000 கன அடி நீர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. கேரளாவிற்கு 3000 கன அடியும், தமிழகத்திற்கு 2000 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும்போது அணையில் இருந்து தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்படும். எனவே, ஆற்றங்கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.