செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிரபு தேவா | சலங்கை ஒலி, சங்கராபரணம் படங்களைப் போல் படம் இயக்க வேண்டும்பிரபு தேவா | சலங்கை ஒலி, சங்கராபரணம் படங்களைப் போல் படம் இயக்க வேண்டும்

பிரபு தேவா | சலங்கை ஒலி, சங்கராபரணம் படங்களைப் போல் படம் இயக்க வேண்டும்பிரபு தேவா | சலங்கை ஒலி, சங்கராபரணம் படங்களைப் போல் படம் இயக்க வேண்டும்

1 minutes read

லஷ்மன் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி இன்று சென்னையில் தொடங்கியது. 11வது ஆண்டாக நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியை நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவாவும், பாடகி சுசீலாவும் தொடங்கி வைத்தார்கள். இந்த இசை நிகழ்ச்சி இன்று முதல் டிசம்பர் 25ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

தொடக்க விழாவில் பிரபுதேவா பேசும்போது, ‘நான் என்னை ஏன் அழைக்கிறீர்கள் என்று லஷ்மன் ஸ்ருதியிடம் கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்று கூறினார். நானே அதை மறந்துவிட்டேன். எனக்கு ஞாபகப்படுத்தியதற்கு லஷ்மன் ஸ்ருதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது உள்ள நடன முறைகளை வைத்தே படம் இயக்கி வருகிறேன். எனக்கும் ‘சலங்கை ஒலி’, சங்கராபரணம் படங்களைப்  போல் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. விரைவில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன். மேலும் இந்த இசை நிகழ்ச்சி மூலம் சென்னையில் பெய்த கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண தொகைகள் வழங்க இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. நீங்களும் தங்களால் முடிந்ததை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகள்’ என்றார்.

மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பி.சுசீலா, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். அதன்பின் வயலின் மேஸ்ட்ரோ இசைமாமேதை பத்மஸ்ரீ அ.கன்னியாகுமரிக்கு வாழ்நாள் இசைச்சேவையை பாராட்டும் முகமாக அவருக்கு இசை ஆழ்வார் பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கி கவுரவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.