செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரான்ஸ் – ரஷிய நாடுகள் உடன்படிக்கை | ஐ.எஸ். குறித்து தகவல் பரிமாற்றம்பிரான்ஸ் – ரஷிய நாடுகள் உடன்படிக்கை | ஐ.எஸ். குறித்து தகவல் பரிமாற்றம்

பிரான்ஸ் – ரஷிய நாடுகள் உடன்படிக்கை | ஐ.எஸ். குறித்து தகவல் பரிமாற்றம்பிரான்ஸ் – ரஷிய நாடுகள் உடன்படிக்கை | ஐ.எஸ். குறித்து தகவல் பரிமாற்றம்

0 minutes read

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் குறித்த தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த பிரான்ஸும், ரஷியாவும் சம்மதித்துள்ளன.
ரஷியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஈவ் லெட்ரியன் – ரஷியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு இடையே திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
இதுகுறித்து ஜான் ஈவ் லெட்ரியன் கூறியதாவது:
சிரியாவில் வான்வழித் தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறித்தும் தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்வதை மேம்படுத்துவது என நானும், ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சரும் முடிவு செய்துள்ளோம்.
இதன்மூலம், உளவுத் தகவல்கள் விவகாரத்தில் ஏற்கெனவே இரு தரப்பினருக்கும் இருக்கும் ஒருங்கிணைப்பு மேலும் பலப்படுத்தப்படும்.
இந்த உடன்பாட்டால் ரஷியாவுடன் கூட்டணி அமைத்ததாகக் கூற முடியாவிட்டாலும், ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்று கூறலாம் என்றார் அவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.