தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகளும் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை செய்தனர். பெருமளவில் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு நேரடியாக சென்று நிவாரண உதவிகளை வழங்கினர்.
இந்நிலையில், மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும், வெள்ள நிவாரண பொருட்களையும் வழங்கி விஷாலுக்கு சென்னை காவல் துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை காவல்துறை சார்பில் கூறும்போது, தமிழகத்தில் பல ஆண்டுகள் கழித்து இயற்கை சீற்றத்தால் வந்த பெரும் பாதிப்பு இம்மழை. இம்மழை வெள்ளத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களுடைய வீட்டையும் பொருட்களையும் விட்டு வெளியேறி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்தோம்.
இம்மழை வெள்ளத்தால் நல்ல உள்ளமிக்க மனிதர்களையும் மற்றும் உதவி செய்யும் பல நிறுவனங்களையும் நாம் கண்டோம். நடிகர் விஷால் கிருஷ்ணா அவருடைய பெரும்பங்காக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும், வெள்ள நிவாரண பொருட்களையும் வழங்கி இருக்கிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க திறமையுடனும் தன் குடும்பதை பாராமலும் இரவு பகலாய் பணிபுரிந்த காவல் துறை நண்பர்களின் சுமார் 1200 குடுபங்களுக்கு, உதவும் விதத்தில் நிவாரண உதவிகளையும் வழங்கினார். இதற்காக சென்னை காவல் துறை சார்பில் விஷாலுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு, அவர் திரையில் மற்றும் கதாநாயகன் அல்ல, நிஜ வாழ்விலும் சிறந்த கதாநாயகன்தான். இதுபோல் அவர்பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம் என்று கூறியுள்ளார்கள்.