ஆயிரக்கணக்கில் அகதிகள் அடுத்தடுத்து ஐரோப்பாவுக்குள் நுழைவது திட்டமிட்ட படையெடுப்பு போல் உள்ளது என்று செக் நாட்டு அதிபர் மிலோஸ் ஜெமான் கூறினார்.
கிறிஸ்துமûஸயொட்டி, செக் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தனது உரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
வயோதிகர்கள், நோயுற்றவர்கள், குழந்தைகள் அகதிகளாக வருவதை மனிதாபிமானத்தோடு ஏற்க முடியும்.
சிரியா, இராக்கிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வருவது என்பது தானாக நடைபெறுவதாக எனக்குத் தெரியவில்லை. சட்ட விரோதமாக அகதிகளாக வருவோரிடையே ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகாதவர்கள். ஆரோக்கியமான உடல் நிலை கொண்டவர்களாக உள்ளனர்.
அலை அலையாக அவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைவது, திட்டமிட்ட படையெடுப்பு போல உள்ளது. தங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறாமல், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளை எதிர்த்து அவர்கள் ஆயுதமேந்திப் போராட வேண்டும் என்றார்.
உள்நாட்டுச் சண்டை நிகழ்ந்து வரும் இராக், சிரியாவிலிருந்து இந்த ஆண்டு மட்டுமே சுமார் 4.8 லட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர் என ஐ.நா. தெரிவித்திருக்கிறது.
3