செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து ஜார்ஜ் பட்டாக்கி விலகல்அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து ஜார்ஜ் பட்டாக்கி விலகல்

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து ஜார்ஜ் பட்டாக்கி விலகல்அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து ஜார்ஜ் பட்டாக்கி விலகல்

1 minutes read

அமெரிக்க அதிபர் பதவிக்கு 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவந்த நியூயார்க் நகர முன்னாள் மேயர் ஜார்ஜ் பட்டாக்கி போட்டியில் இருந்து விலகிகொள்வதாக அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக இந்திய அமெரிக்கரான பாபி ஜிண்டால்(44), கடந்த ஜூன் மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கட்சியினரிடையே ஆதரவு திரட்டும் பாபி ஜிண்டாலின் முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. மக்களிடையே அவரது பிரசார யுக்திகள் எடுபடாமல் போனது. தேர்தல் பிரசாரத்துகான நிதி திரட்டும் முயற்சியிலும் அவர் பின்தங்கியே இருக்கிறார் என அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்து வந்தன.

இந்நிலையில், கள எதார்த்தத்தை உணர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து பாபி ஜிண்டால் விலகிக் கொண்டதாக அவரது பிரசார செயலாளர் அறிவித்தார். இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு கடந்த மாதம் பாபி ஜிண்டால் பேட்டி அளித்தார்.

‘இது எனக்கான சரியான நேரமல்ல, என்பதை நான் உணருகிறேன். பொறாமை மற்றும் பிரிவினைவாத அரசியலில் நாம் நம்பிக்கை வைக்க கூடாது. எனவே, போட்டியில் இருந்து விலகிக்கொண்டு குடியரசு கட்சியின் சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்துள்ளேன். வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்காமல் வளர்ச்சி திசையை நோக்கி குடியரசு கட்சி முன்னேறிச் செல்ல வேண்டும். எனவே, இந்த போட்டியில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என இந்த பேட்டியின்போது ஜிண்டால் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் தேர்தலில்போட்டியிட ஆதரவு திரட்டிவந்தவர்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக ஊடகங்களால் முன்னர் சுட்டிக்காட்டப்பட்ட ஜார்ஜ் பட்டாக்கி நேற்று முறைப்படி தனது விலகல் அறிவிப்பை வெளியிட்டார்.

இவரை தவிர்த்து மேலும் 12 பேர்  ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் நிலையில் இந்த பிரசாரத்தில் தலைமை இடத்தை பிடித்திருக்கும் டொனால்ட் டிரம்ப் மட்டும் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கூடாது என்பதில் இவர் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாட்டில் அடுத்த ஆண்டு (2016) நவம்பர் 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி ஒபாமா, இருமுறை பதவி வகித்துவிட்ட நிலையில் மூன்றாவது முறையாக போட்டியிட இயலாது. எனவே, ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கான முதல்கட்ட பணிகளில் அவர் இறங்கி உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.