செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் எழுதி சாதனை | நா.முத்துக்குமார் 2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் எழுதி சாதனை | நா.முத்துக்குமார்

2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் எழுதி சாதனை | நா.முத்துக்குமார் 2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் எழுதி சாதனை | நா.முத்துக்குமார்

1 minutes read

கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக கோலோச்சி வருபவர் நா.முத்துக்குமார். இந்தியாவின் மிகப்பெரிய விருதான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார்.

தொடர்ந்து நிறைய படங்களில் அதிக பாடல்களை எழுதி வரும் நா.முத்துக்குமார் 2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் எழுதியுள்ளார். இதில், 9 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

பாபநாசம், காக்கிச்சட்டை, பசங்க 2, டார்லிங், விஎஸ்ஓபி உள்ளிட்ட இந்த வருடம் வெளிவந்த படங்களில் வெற்றிப்பாடல்களை எழுதியுள்ள நா.முத்துக்குமார், அடுத்த வருடம் வெளிவரவிருக்கும் ‘தெறி’, ‘சேதுபதி’, ‘கோ-2’. ‘தரமணி’ உள்ளிட்ட 120 படங்களுக்கும் மேல் பாடல்களை எழுதி வருகிறார்.

2015-ஆம் வருடம் வெற்றி வருடமாக அமைந்ததுபோல், அடுத்த வருடமும் வெற்றி வருடமாக அமையும் என்று நா.முத்துக்குமார் நம்பிக்கை தெரிவிக்கிறார். 2015-ல் அதிக பாடல் எழுதியுள்ள இந்த தருணத்தில், இவருக்கு வாய்ப்பளித்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பாடிய பாடகர்கள், பாடகிகள், சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் நா.முத்துக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.