மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் நாடாளுமன்ற, குடியரசுத் தேர்தல்கள் ஒரு சேர புதன்கிழமை நடைபெற்றன.
அந்த நாட்டின் அதிபர் ஃபிரான்ஸுவா போûஸஸ் கடந்த 2013-ஆம் ஆண்டு பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பிறகு, அங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைக்கு, இந்தத் தேர்தல்கள் மூலம் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஃபிரான்ஸுவைத் தொடர்ந்து பதவியேற்ற முஸ்லிம் தலைவரான மிஷெல் ஜோடேடியா, பெரும்பான்மையினர் மீது மதவாத ஆயுதக் குழுக்கள் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வந்ததையடுத்து பதவியிலிருந்து விலகினார்.
அதனைத் தொடர்ந்து கேதரீன் சம்பா-பான்ஸா இடைக்கால அதிபராகப் பொறுபேற்ற நிலையிலும் அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை தேர்தலைத் தொடர்ந்து அங்கு அமையவிருக்கும் புதிய அரசு வன்முறையைக் கட்டுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
0