செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தின் M16 உளவு அமைப்பின் தலைமை பொறுப்புக்கு முதல் பெண் நியமனம்!

இங்கிலாந்தின் M16 உளவு அமைப்பின் தலைமை பொறுப்புக்கு முதல் பெண் நியமனம்!

0 minutes read

இங்கிலாந்தின் வெளிநாட்டு உளவுப் பணிகளை முன்னெடுத்து வரும் M16 அமைப்பின் தலைமை பொறுப்புக்கு முதல்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம் என இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட M16இன் 116 வருட வரலாற்றில் முதல் முறையாக அதன் தலைமை பொறுப்புக்கு பிளேஸ் மெட்ரூவேலி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவர் குறித்த அமைப்பின் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை கவனித்து வருகின்றார். M16 அமைப்பின் தற்போதைய பொறுப்பாளர் சர் ரிச்சர்ட் மூர் ஓய்வு பெற்ற பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பிளேஸ் மெட்ரூவேலி M16 இன் தலைமை பொறுப்பை ஏற்பார்.

பிளேஸ் மெட்ரூவேலி, 1999ஆம் ஆண்டு M16 உளவு அமைப்பில் இணைந்துகொண்டார். ஓர் உளவு அதிகாரியாக பணியில் இணைந்த இவர், உட்நாட்டு உளவு விடயங்களைக் கவனித்துக்கொள்ளும் M15 அமைப்பின் இயக்குநர் பொறுப்பிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.