செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் அவித்த முட்டையின் ஊட்டச்சத்துக்கள்

அவித்த முட்டையின் ஊட்டச்சத்துக்கள்

1 minutes read

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஏராளமான சத்துக்கள் அவித்த முட்டையில் நிறைந்துள்ளன. நாம் அன்றாடம் உண்ணும் பல்வேறு உணவுகளில், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய கெட்ட கொழுப்பு என இரண்டுமே உள்ளன.

முழுமையான பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய் எண்ணெய், சிவப்பு இறைச்சி, வறுத்த உணவுகள் போன்ற பலவற்றில் கெட்ட கொழுப்பு அதிகம் இருக்கும். அதேவேளையில், அக்ரூட் பருப்பு , ஆலிவ் எண்ணெய், அவகேடோ, பாதாம், பூசணி விதை, சால்மன் மீன், மற்றும் முட்டை போன்றவற்றில் நல்ல கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இந்த கொழுப்புகள் எந்த உணவில் அதிகம் என்பதை வைத்து, மற்றொன்று இல்லை என்று அர்த்தமாகாது.

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், செலினியம், பாஸ்பரஸ், கோலின், லூட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என உடலுக்குத் தேவையான பல முக்கியச் சத்துக்கள் அடங்கியுள்ளன.

நீங்கள் அன்றாடம் உண்ணும் பிற கொழுப்பு சத்துள்ள உணவுகளில் உள்ள அதே அளவு கொழுப்புதான் முட்டையின் மஞ்சள் கருவிலும் உள்ளது. உங்களுக்கு இதய பிரச்சனை அல்லது அதிக ரத்த அழுத்தம் இல்லையென்றால், அதிக புரதச்சத்து தேவைப்பட்டால், இரண்டு முட்டையின் வெள்ளை பகுதியுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து சாப்பிடலாம். வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முழு அவித்த முட்டை சாப்பிடலாம்.

இதய பிரச்சனை, அதிக ரத்தக் கொழுப்பு, சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரத்துக்கு 3 அல்லது 4 முட்டைகள் வரை சாப்பிடலாம். ஏனெனில், மஞ்சள் கருவில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதால், அது ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்தக்கூடும். வயது அதிகம், நடமாட்டம் குறைவு என்றால் முட்டை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் முட்டையை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.