வடக்கு , கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை மற்றும் அடிப்படையில்லாத அநீதிகளுக்கு சர்வதேச நீதிப் பொறிமுறைகள் மூலம் நீதியான தீர்வை சர்வதேச சமூகம் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு, கிழக்கில் மனிதப் புதைகுழிகளில் இருந்து அநேகமாக மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கின்றன.
கொக்குத்தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 51 மனித எலும்புக்கூடுகள் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டவையாகவும் அடைத்து மறைக்கப்பட்டவையாகவும் மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொகுதிகளாக சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை பலர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த இனப்படுகொலை குறித்து அரசு வெளிப்படையாக ஒப்புதல் அளிக்க மறுப்பதும், தமிழர் சமுதாயத்துக்கு பெரும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சமுதாயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வதேச நீதி மற்றும் மனித உரிமை அமைப்புக்களைத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றர்.” – என்றார்.