செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் எலும்புகள் வந்து பேசுகின்றன | நதுநசி

எலும்புகள் வந்து பேசுகின்றன | நதுநசி

1 minutes read

சொல்லி விட உறைத்தது
உணர்வு பொங்கி எழுந்தது.
உள்ளம் கொஞ்சம் விம்மி
மூச்சு முட்ட அழுதது.

நேற்றுப் போல் இதனை
கடந்து போய்விட
மனம் மறுத்து நிற்கிறது.
இந்த செம்மணியை.

எத்தனையோ துயரம்
கடந்து போன பின்னும்
பால்ப் போத்தலோடு ஒரு
குழந்தை எலும்புக்கூடாய்.

கண் முன்னே அந்த
காட்சி வந்து நிற்கிறது.
கொன்றவர் தாயை என்றால்
பிள்ளையை தூக்கி போட்டு;

ஐயகோ!……
அந்த குழந்தை
உயிரோடு குழி வீசப்பட;
வீரிட்டு குரலெழுப்பி;

உரக்க கத்தி இருக்கும்.
பள்ளி புத்தகப்பை;
அதற்குள் என்ன இருக்கும்.
அன்னையோடு பிள்ளை;……

நடந்தது போயிருக்க;
சிதைந்த மேனியோடு
அவளை குழி வீசிய போது
இந்த பிள்ளையையும் எப்படி?

இரக்கம் இல்லாது;
அன்னையை – அந்த காவலரன்
காடையர் செய்து விட்ட
கொடூரம் இவையன்றோ?

செய்த துயரம்
செய்த சிங்களவர் மீது
உணர்வென்ற ஒன்றாய்க் கூட
திரும்பி பாயாதோ?

அவருக்கும் இவர்கள் போல்
அக்கா இருத்திருக்க;
அக்கா பிள்ளை இருக்க;
வாய்ப்பு இருந்திருக்குமே!

குற்றுயிராய் புதைகுழி – அதில்
கிடந்து முனகிட ;
கண்ணுற்று கண்கள்
கசிந்திடாத மானிடரோ சிங்களவர்.

பௌத்தம் போதித்த
கொள்கைகள் தோற்றன.
புத்தரும் வெட்கித் தலைகுனிய
களம் ஒன்று கொடுத்தனர்.

இலங்கையின் வடக்கில்
தமிழரை கொன்று புதைத்த
குழிகளில் இருந்து
எலும்புகள் வந்து பேசுகின்றன.

ஒன்றா இரண்டா?
இதுவரை நூற்றியொன்று
நூற்றெடுத்த ஆடைகள்
களைந்தல்லவா புதைத்தார்.

ஒவ்வொரு நாளும்
வாழ்ந்த மண்ணில்
புதைகுழிகள் தோண்டப்பட
நெஞ்சம் கனத்துப் போகிறது.

இன்னும் எத்தனை
எலும்புக்கூடுகள் வருமோ?
அத்தனையும் கொடூரர்களால்
கொன்றொழிக்கப்பட்ட எம்முறவுகளே!

நதுநசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.