செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘போராட்டம்’ | ஈழ சினிமாவில் புதிய பரிணாமம்

‘போராட்டம்’ | ஈழ சினிமாவில் புதிய பரிணாமம்

1 minutes read

நேற்று இலண்டனில் ‘போராட்டம்’ திரைக்கு வந்தது. அரங்கம் நிறைந்த ஆர்வலர்கள், ஈழ சினிமாவை கனவுக்குள் சுமக்கும் நம் இலண்டன் கலைஞர்கள், என்றும் எம் சினிமாவுக்காக ஊடகப் பணியினூடே வலுச்சேர்க்கும் ஊடகத்துறையினர், தமிழ் சமூக வளர்ச்சியினை கண்ணுக்குள் வைத்து பணிசெய்யும் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், இக்கரைச் சீமையிலும் இயங்கும் எம் அரசியல் செயற்பாட்டாளர்கள், இலண்டனில் வெற்றிகரமாக இயங்கும் தமிழ் வர்த்தகர்கள் எனப் பெரிய பட்டாளமே கூடி நிற்க எம்மவர் சினிமாவின் புதிய வரவு ‘போராட்டம்’ இலண்டனில் நேற்று முதன்முதலாக திரையிடப்பட்டது. நானும் இவர்களுடன் இணைந்து பார்த்தேன்.

தாயகத்தில் எம்மவர் எதிர்நோக்கும் சமூக இடரினைச் சொல்லும் கதையை எம்மவரின் அரசியலை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்திருக்கின்றார் இயக்குனர் சிவராஜ். இது எமது இனத்தின் இன்றைய நிலைக்கு இன்றியமையாத அணுகுமுறை.வாழ்த்துகள் இயக்குனர் சிவராஜ்.

மதீசனின் இசை அசரவைக்கின்றது. தாயக தமிழக பாடகர்களுடன் பெரும் இசைப்பயணம் செய்துள்ளார். பாடல் வசனங்களும் அருமை. நம்ம பையனின் இசையமைப்பு இப்பவும் என் காதுக்குள் நர்த்தனமிடுகின்றன. சிறப்பு மதீசன்.

நெதர்லாந்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன், தாயகத்தில் ஒரு கரையோர கிராமத்தில் நடக்கும் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அந்தக் கிராமத்தின் வாழ்வியலுடன் உள்வாங்கப்பட்ட நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். இதுவொரு சாதாரண விடயமல்ல, சவாலான விடையம். சாதாரண விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வினை உள்வாங்கி நடித்துள்ளார். மிகவும் சிறப்பு, வாழ்த்துகள் ரீகன், சிறந்த எதிர்காலமுண்டு. தொடர்ந்து பயணியுங்கள்.

ஏனைய கலைஞர்களும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்களும் சிறப்பு, இவை அவர்களின் திறமையா அல்லது இயக்குனரின் திறமையா?

இவற்றுக்கெல்லாம் மேலாக ஈழ சினிமாவின் மேல் நம்பிக்கையும் தீராக் காதலும் கொண்டு விடாமுயற்சியுடன் பயணிக்கும் தயாரிப்பாளர் கந்தையா பாஸ்கரனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

சுப்ரம் சுரேஷ். (நன்றி – முகநூல்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.