இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான ராஜ குடும்ப உறுப்பினராக இளவரசர் வில்லியம் முன்னிலையில் உள்ளார்.
YouGov அமைப்பு ராஜ குடும்ப உறுப்பினர்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
இதன்படி, இளவரசர் வில்லியம் முதல் இடத்திலும் இளவரசி கேட் மிடில்டன் இரண்டாவது இடத்திலும் மன்னர் மூன்றாம் சார்லஸின் சகோதரியான இளவரசி ஆன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இளவரசி கேட் மிடில்டன் (கேத்தரின்), 2011ஆம் ஆண்டு இளவரசர் வில்லியமை திருமணம் செய்ததிலிருந்தே இங்கிலாந்தின் பிரபலமான ராஜ குடும்ப உறுப்பினராகத் திகழ்ந்தார்.
ஆனால், தற்போது நிலை மாறியுள்ளமையை சமீபத்திய கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகின்றது.
அதாவது, 74 சதவீதமான இங்கிலாந்து மக்கள், இளவரசர் வில்லியம் தங்களுக்கு பிடித்த ராஜ குடும்ப உறுப்பினர் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கு இளவரசி ஆன், பல ஆண்டுகளாகவே மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.