செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் SAFF சம்பியன் பட்டத்துக்கு 23 ஆண்டுகளாக காத்திருக்கும் பங்களாதேஷ் இன்று இரவு பூட்டானை சந்திக்கிறது

SAFF சம்பியன் பட்டத்துக்கு 23 ஆண்டுகளாக காத்திருக்கும் பங்களாதேஷ் இன்று இரவு பூட்டானை சந்திக்கிறது

1 minutes read

பங்களாதேஷின் டாக்கா தேசிய விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (5) இரவு வரவேற்பு நாடான பங்களாதேஷுக்கும் பூட்டானுக்கும் இடையிலான பி குழு போட்டி நடைபெறவுள்ளது.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன் பட்டத்துக்கு 23 வருடங்களாக காத்திருக்கும் வரவேற்பு நாடான பங்களாதேஷ், சொந்த நாட்டில் போட்டி நடைபெறுவதால் அதனை அனுகூலமாக்கிக் கொண்டு பூட்டானுக்கு எதிராக தனது வெற்றிக்கணக்கை ஆரம்பிக்க உறுதிபூண்டுள்ளது.

இந்த வருடம் சம்பியன் பட்டத்தை சுவீகரிக்க முடியும் என நம்புவதற்கு எல்லா காரணங்களும் இருப்பதாக பங்களாதேஷின் தலைமைப் பயிற்றுநர் தோமஸ் டூலி தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் போன்று இம்முறை பங்களாதேஷ் அணி அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை எனவும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் வீரர்கள் இந்த சுற்றுப் போட்டியை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.

பங்களாதேஷும் பூட்டானும் சர்வதேச மற்றும் சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் 17 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன.

பங்களாதேஷ் 13 வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் இரண்டில் மாத்திரமே பூட்டான் வெற்றிபெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் வெற்றி – தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் பங்களாதேஷ் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாகக் காணப்படுகிறது.

இந்தப் போட்டியில் பூட்டான் அசாத்திய திறமையை வெளிப்படுத்தினாலன்றி பங்களாதேஷை வெற்றிகொள்வது இலகுவான காரியமல்ல.

தெற்காசிய கால்பந்தாட்டத்தில் பங்களாதேஷ் கடைசியாக 2003ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் சம்பியனாகி இருந்தது. அதன் பின்னர் 2009இலும் 2018இலும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பை பங்களாதேஷ் நடத்திய போதிலும் அந்த இரண்டு அத்தியாயங்களிலும் பங்களாதேஷின் பெறுபேறுகள் திருப்திகரமாக அமையவில்லை.

ஆனால், இந்த வருடம் பங்களாதேஷ் கடைசிவரை போராடும் என நம்பப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.