Shein நிறுவனம், இங்கிலாந்தில் 2.05 பில்லியன் பவுண்ட் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32.3 சதவீதம் அதிகமாகும்.
அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை அடுத்து இங்கிலாந்தில் அதன் சந்தை விரிவடைந்திருக்கிறது.
சீனாவில் நிறுவப்பட்ட Shein நிறுவனத்தின் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது.
ஆடைகள் மட்டுமல்லாமல் தற்போது விளையாட்டு மற்றும் கைவினைப் பொருள்களையும் அது விற்பனை செய்கிறது.
மலிவான விலை, தள்ளுபடி மற்றும் சன்மானம் ஆகியவை வழங்கப்படுவதால் அது வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகத் திகழ்கிறது.
இதற்கிடையே, சீனாவிலிருந்து வரும் இறக்குமதிக்கு அமெரிக்கா வரிகளை உயர்த்துவதால் Shein நிறுவனத்தின் பொருள்கள் இனிமேலும் மலிவாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
அத்துடன், Shein போன்ற இணைய வர்த்தகத் தளங்கள் செய்யும் இறக்குமதிக்குச் சாதகமான கொள்கைகள் இருப்பதாக இங்கிலாந்து மீது சில்லறை வணிகர்கள் குறை கூறுகின்றனர்.
அந்தக் கொள்கைளை இங்கிலாந்து தற்போது மறு ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.