அமெரிக்காவில் வலசாரி ஆர்வலர் சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் கண்டறியப்பட்ட மரபணு, சந்தேகநபர் டைலர் ராபின்சனுடன் (Tyler Robinson) ஒத்துப்போவதாக அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் கூறியிருக்கிறார்.
22 வயது ராபின்சன், 33 மணிநேர தேடலுக்குப் பின்னர் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
அவர் மீது இவ்வாரம் குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி : பல்கலைக்கழக மாணவரே சார்லி கிர்கின் கொலை சம்பவத்தின் சந்தேகநபர் ஆனார்!
ராபின்சன் கட்டடக் கூரையிலிருந்து கிர்க்கைச் சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் கூறினர்.
உயிரிழந்த 31 வயது சார்லி கிர்க் , அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பிற்கு மிகவும் நெருக்கமானவர்.
கடந்த புதன்கிழமை யூட்டா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார்.