தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவை சேர்ந்த டி.சி.எஸ். நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் ஏஜென்ஸியான டாப் எம்ப்ளாயர்ஸ் இன்ஸ்டிடியூட் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதர படிகளை வழங்குவது, அவர்களின் வேலையில் பதவி உயர்வுகள் வழங்கப்படுவது ஆகியவற்றில் டி.சி.எஸ். நிறுவனம் நன்றாக செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.சி.எஸ். தவிர செயின்ட் கோபெயின், வேலியோ, டி.எச்.எல் போன்ற நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.