செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலிபாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலிபாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலி

1 minutes read

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலியாகி உள்ளனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் வியாழக்கிழமை ஆரம்பித்த கோடை மழை, பின்னர் பிற மாகாணங்களுக்கும் பரவி தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.

இதுபற்றி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி பலூசிஸ்தானில் 18 பேரும், பழங்குடி பிராந்தியங்களில் 15 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 10 பேரும், கைபல் பாக்துன்க்வாவில் 6 பேரும் என மொத்தம் 49 பேர் மழை தொடர்பான விபத்துக்களில் பலியாகி உள்ளனர். 75 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சில பகுதிகளில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பஞ்சாப் மாகாணத்தின் தென்பகுதியில் கோதுமை பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழை விட்டபோதிலும், இந்த வார மத்தியில் மற்றொரு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மழைப் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே பகுதிகளில் பெய்த கோடை மழை மற்றும் வெள்ளத்திற்கு 80 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.