ஜெர்மனியின் மூன்று மாகாணங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஏஞ்சலா மெர்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சி, இரண்டு மாகாணங்களில் தோல்வியைத் தழுவியது.
போரால் பாதிக்கப்பட்ட சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் அகதிகளை ஏற்பதில் மெர்கெல் கடைப்பிடித்து வரும் தாராளக் கொள்கைக்கு மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பு அலையே, தேர்தலில் ஆளும் கட்சி தோற்றதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜெர்மனியின் பாடென்-வுர்டெம்பெர்க், ரைனெலாண்ட்-பாலாடினேட், சாக்ஸனி-அன்ஹால்ட் ஆகிய மாகாணங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆளும் கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்த பாடென்-வுர்டென்பர்க் உள்ளிட்ட இரண்டு மாகாணங்களில் தோல்வியடைந்தது. ஜெர்மனியில் அகதிகள் விவகாரத்தில் மெர்கெல் தாராளக் கொள்கையைக் கடைப்பிடித்ததே காரணம் என்று கூறப்படுகிறது.
“அகதிகளை சுட்டுத் தள்ள வேண்டும்’ என்ற கூறி சர்ச்சையை ஏற்படுத்திய வலதுசாரிக் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.