செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர்-நடிகைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எப்போதும் தயாராக இருக்கிறது -நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ்நடிகர்-நடிகைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எப்போதும் தயாராக இருக்கிறது -நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ்

நடிகர்-நடிகைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எப்போதும் தயாராக இருக்கிறது -நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ்நடிகர்-நடிகைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எப்போதும் தயாராக இருக்கிறது -நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ்

1 minutes read

நடிகர்-நடிகைகள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது திரையுலகினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘தர்மயுத்தம்’ படத்தில் ரஜினிகாந்த் தங்கையாக நடித்த லட்சுமிஸ்ரீ 1979-ல் தூக்கில் தொங்கி இறந்தார். நடிகை படாபட் ஜெயலட்சுமி 1979-ல் தற்கொலை செய்துகொண்டார். நடிகை ஷோபா 1980-ல் தனது 18-வது வயதில் தூக்கில் தொங்கினார். கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா 1996-ல் தூக்கில் பிணமாக தொங்கினார். காதல் தோல்வி, பண நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

நடிகை விஜி மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டில் காதல் தோல்வியால் தூக்கில் தொங்கி இறந்தார். நடிகை சிம்ரன் தங்கை மோனல் 2002-ல் காதல் தோல்வியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே வருடம் நடிகை பிரதியுஷாவும் விஷம் குடித்து இறந்தார். டி.வி. நடிகைகள் ஷ்ரதா, மயூரி, வைஷ்ணவி, ஷாலினி ஆகியோரும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்கள். 2011-ல் நகைச்சுவை நடிகை சோபனாவும், 2014-ல் நடிகர் முரளிமோகனும் தற்கொலை செய்துகொண்டனர்.

காதல் தோல்வி, குடும்ப பிரச்சினைகள், பணக்கஷ்டம், விவாகரத்துகள் போன்றவைகளால் ஏற்படும் மன உளைச்சல்களே இதுபோன்ற தற்கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே தற்கொலை முடிவுகளை தடுக்க நடிகர்-நடிகைகளுக்கு ‘கவுன்சிலிங்’ அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ் கூறும்போது, ‘‘நடிகர்-நடிகைகள் தற்கொலை முடிவுகளுக்கு தூண்டப்படுவது வருத்தம் அளிக்கிறது. இந்த உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இல்லை. சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தைரியமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நடிகர்-நடிகைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எப்போதும் தயாராக இருக்கிறது. பிரச்சினைகளை போனில் சொன்னால் போதும். உதவ தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.