செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிரபல தெலுங்கு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளியானநிரோஷா தற்கொலைபிரபல தெலுங்கு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளியானநிரோஷா தற்கொலை

பிரபல தெலுங்கு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளியானநிரோஷா தற்கொலைபிரபல தெலுங்கு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளியானநிரோஷா தற்கொலை

1 minutes read

கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சோகம் முடிவதற்குள் மேலும் ஒரு சின்னத்திரை தொகுப்பாளினி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

செகந்திரபாத்தில் உள்ள பிரபல தெலுங்கு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளியான பணியாற்றி வந்தவர் நிரோஷா. இவருடைய சொந்த ஊர் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. எனவே, செகந்திரபாத்திலேயே பெண்களுக்கான விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அவர் தனது அறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவரது தற்கொலை குறித்து சித்தூர் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 வயதான நிரோஷா, இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொண்டது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிரோஷா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். நிரோஷாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.