பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பெண் அதிபர் பேநசீர் புட்டோ படுகொலை மற்றும் தேசத்துரோகம் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் முஷாரப் மீது தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து முஷாரப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி அன்வர் ஜாகீர் ஜமாலி தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, முஷாரப் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.
முஷாரப் சிகிச்சைக்காக துபாய் செல்ல வேண்டி உள்ளதால் இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.