பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க 2’ மற்றும் ‘கதகளி’ படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில் ‘பசங்க 2’ படத்தில் சூர்யா, அமலாபால், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் பசங்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இப்படம் உருவாகியிருந்தது.
‘கதகளி’ படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். ஆக்ஷன் படமாக இப்படம் வெளியானது. இவ்விரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது இவ்விரு படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நாளை வெளியாக இருக்கிறது.
சூர்யா, விஷால் இருவருக்குமே தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் தமிழை போலவே தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.