செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஊழல் வழக்குகளில் சிக்கிய 817 அதிகாரிகளுக்கு தண்டனை | சீனாஊழல் வழக்குகளில் சிக்கிய 817 அதிகாரிகளுக்கு தண்டனை | சீனா

ஊழல் வழக்குகளில் சிக்கிய 817 அதிகாரிகளுக்கு தண்டனை | சீனாஊழல் வழக்குகளில் சிக்கிய 817 அதிகாரிகளுக்கு தண்டனை | சீனா

1 minutes read

கடந்த ஆண்டில் ஊழல் வழக்குகளில் சிக்கிய 817 அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சீன அதிபராக ஜீ ஜின்பிங் பொறுப்பேற்றதிலிருந்து ஊழலுக்கு எதிராக பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டில் சீனாவில் லஞ்சம் தொடர்பாக 36 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டைக் காட்டிலும், 2015-இல் லஞ்சம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 62.4 சதவீதம் அதிகம் என்று சீன தலைமை விசாரணை அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.

வழக்கு விசாரணையின் முடிவில் 817 அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடர்ந்து, அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதேபோன்று, ஊழலில் ஈடுபட்ட 928 நிறுவனங்களும் தண்டனை விதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கியதில் 91 சதவீதம் அளவு தனியார் நிறுவனங்களாகும். ஏலம் தொடர்பாக முறைகேடு செய்து ஊழலில் சிக்கியவர்களுக்கு எதிராக 27 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக சீன தலைமை விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.