தமிழக மீனவர்கள் 96 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு.அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய கோரி முதல்வர் ஜெயலலிதா , பிரதமருக்கு தொடர்ந்த கடிதம் மூலம் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் சிறையில் உள்ள 94 மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வரும் 24-ம் தேதி மீனவர்கள் 96 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
7