உலகம் முழுவதும் ரூ.530 லட்சம் கோடி வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியை சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நிதியம் அளித்த தகவல்களின் அடிப்படையில் இத்தாலிய பொருளாதார நிபுணர்கள் கணக்கெடுப்பு நடத்தினர். இதில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் மட்டும் 8 முதல் 10 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பங்குகள், கடன் பத்திரம் மற்றும் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பணம் மட்டுமே என்றும் அசையா சொத்து மற்றும் நகைகளில் செய்துள்ள முதலீடு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
மேலும் வங்கிளின் மீதான கண்காணிப்பு குறைவான நாடுகளிலும், முதலீட்டாளர்களின் ரகசியத்தை காக்கும் நாடுகளிலும் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.