செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இன்று இரண்டு கோடிஅமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இன்று இரண்டு கோடி

அமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இன்று இரண்டு கோடிஅமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இன்று இரண்டு கோடி

1 minutes read

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இன்று இரண்டு கோடியாக உயர்ந்தது.

அமிதாப் பச்சனை டுவிட்டரில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், லட்சக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு ரசிகர்களும் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், அவரது டுவிட்டர் அபிமானிகளின் எண்ணிக்கை இன்று இரண்டு கோடியாக உயர்ந்துள்ளதாக அமிதாப் தெரிவித்துள்ளார்.

‘அடேங்ங்ங்கப்பா..’ இரண்டு கோடி! அனைவருக்கும் நன்றி, இனி 3 கோடியை நோக்கி.., யுவர் டைம் ஸ்ட்ராட்ஸ் நவ் என்ற பதிவுடன் இந்த மகிழ்ச்சி தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இணைந்த அமிதாப் பச்சன் அன்றிலிருந்து இன்றுவரை தனது அபிமானிகளுடன் அவ்வப்போது கலந்துறவாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் அமிதாப்-புக்கு அடுத்தபடியாக 1.86 கோடி அபிமானிகளுடன் நடிகர் ஷாருக் கான், 1.69 கோடி அபிமானிகளுடன் நடிகர் ஆமிர் கான், 1.68 கோடி அபிமானிகளுடன் நடிகர் சல்மான் கான்,  1.32 கோடி அபிமானிகளுடன் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.