பாகிஸ்தானில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது விஷ சாராயம் அருந்திய 35 பேர் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த டாண்டே முகமது கான் மற்றும் மிர்புர்காஸ் மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.
உயிரிழந்தவர்களில் 33 பேர் ஹிந்துக்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட விரோதமாக மது அருந்தியதால் போலீஸ் நடவடிக்கைக்கு அஞ்சி, விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சேராததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.