தேசியக் கொடியை மாற்ற வேண்டுமா, வேண்டாமா என்று நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் தற்போது பயன்பாட்டில் உள்ள தேசியக்கொடியே தொடர நியூசிலாந்து மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெள்ளிநிற, பேர்ன் என்ற ஒரு வகைத் தாவரத்தின் இலையுடன் கூடிய கறுப்புநிறக் கொடியை நியூசிலாந்து நாட்டின் புதிய கொடியாக கொண்டுவர வேண்டும் என்று தற்போதைய பிரதமர் ஜான் கீ உட்பட பல குரல் எழுப்பிவந்தனர். இந்த கோரிகை தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று பொதுவாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பழைய பிரிட்டிஷ் யூனியன் கொடியை உள்ளடக்கிய தேசியக் கொடியையே ஆதரவாக அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். முதற்கட்ட முடிவுகளின்படி, 56.6 சவீதமான மக்கள் புதிய கொடியை அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரித்துள்ளனர்.