ராகவால் லாரன்ஸ் தற்போது நடித்து வரும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. சாய் ரமணி இயக்கி வரும் இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தை வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் அம்ரிஷ் இசையமைப்பில் ராகவா லாரன்ஸ் முதன் முறையாக ‘லோக்கல் மாஸ்’ என்று தொடங்கும் ஒரு பாடலை சுசித்ராவுடன் இணைந்து பாடி இருக்கிறார். இதே பாடலை பாஸ்ட் பீட்டில் பாடகர் திப்புவும், பாடகி மாலதியும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
ஸ்லோ பீட்டிலும், பாஸ்ட் பீட்டிலும் இரண்டு விதமாக பதிவு செய்யப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் வரும் ஞாயிறு அன்று சிங்கிள் ட்ராக்காக வெளியிடப்படுகிறது. இந்த இரண்டு விதமான பாடல்களில் எதை மக்கள் அதிகம் விரும்புகிறார்களோ அந்த பாடலை படமாக்கப்பட இருக்கிறார்கள். அன்றைய தினத்தில் மோஷன் போஸ்டரும் வெளியிட இருக்கிறார்கள்.