செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 40 லட்சம் சீன மாணவர்கள் கல்வி பயில வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக புள்ளிவிவரம் 40 லட்சம் சீன மாணவர்கள் கல்வி பயில வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக புள்ளிவிவரம்

40 லட்சம் சீன மாணவர்கள் கல்வி பயில வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக புள்ளிவிவரம் 40 லட்சம் சீன மாணவர்கள் கல்வி பயில வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக புள்ளிவிவரம்

1 minutes read

கடந்த 38 ஆண்டுகளில் படிப்பு நிமித்தமாக சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 40.4 லட்சம் மாணவர்கள் சென்றுள்ளதாக சீன அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் இதுவரையில், சீனாவிலிருந்து கல்வி பயிலும் நோக்குடன் வெளிநாடுகளுக்கு 40.4 லட்சம் மாணவர்கள் சென்றுள்ளனர். அவர்களில் 22.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மீண்டும் தாய்நாடு திரும்பியுள்ளனர்.

கடந்த 2015இல், 5.20 லட்சம் சீன மாணவர்கள் படிப்பு நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், 4,09,100 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பியவர்களில், 75 சதவீதம் பேர் கிழக்கு கடலோர நகரங்களில் பணிபுரிவதையே அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

சீனாவின் மிகப்பெரிய நகரங்களாக திகழும் பெய்ஜிங், குவாங்ஸு, ஷாங்காய் மற்றும் ஷென்ஸென் நகரங்களில் பணிபுரிய 49 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்தனர்.

வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா என்ற நோக்கத்துடன் மாணவர்கள் வேலையைத் தேர்வு செய்கின்றனர். அதன் பிறகே, வேலை செய்யும் இடம் மற்றும் சம்பளத்தைப் பார்க்கின்றனர். வெளிநாடுகளில், மேலாண்மை, அறிவியல், மற்றும் பொருளாதாரம் படித்த மாணவர்களுக்கு சீனாவில் அதிக தேவை உள்ளது. இதனையடுத்தே, பொறியியல், கலை மற்றும் சட்டப்படிப்பு மாணவர்கள் உள்ளனர்.

வெளிநாடு சென்று தங்கிப்படிக்கும் சீன மாணவர்களில் 97 சதவீதம் பேர் தங்களது சொந்தப் பணத்தையே செலவிடுகின்றனர் என்று புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.