செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இஸ்லாமை அரசு மதத்தில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடிஇஸ்லாமை அரசு மதத்தில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி

இஸ்லாமை அரசு மதத்தில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடிஇஸ்லாமை அரசு மதத்தில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி

1 minutes read

வங்காளதேசம் நாட்டில் சுமார் 90 சதவீதம் இஸ்லாம் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். 8 சதவீதம் இந்துக்களும், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்த மற்ற பிரிவினர் மிகவும் குறைவாகவும் இருக்கின்றனர். வங்கதேசம் நாட்டில் இஸ்லாம் அரசு மதமாக உள்ளது.

இஸ்லாம் மதமானது கடந்த 1988-ம் ஆண்டு முதல் அரசின் மதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இதற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வந்தது. இஸ்லாம் அரசு மதமாக இருப்பது சட்டத்திற்கு விரோதமானது என்று அவர்கள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டது.

இதனையடுத்து, இஸ்லாம் அரசு மதத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதற்கு முக்கிய காரணம், வங்கதேசத்தில் இஸ்லாமியர் தவிர்த்த இதர பிரிவினர் மீது தீவிரவாத தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகும். அதிலும் குறிப்பாக ஷியாத் பிரிவு முஸ்லீம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, இஸ்லாமை அரசு மதத்தில் இருந்து நீக்குவது தொடர்பாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இஸ்லாமை அரசு மதத்தில் இருந்து நீக்கக் கோரிய மனுவை வங்காள தேசம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிமன்றம் தமது உத்தரவில், மனு தாரருக்கு இந்த ரிட் மனுவை தாக்கல் செய்ய உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.