அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பாடப் புத்தகங்களில் ஹிந்து மதம் தொடர்பான பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு தெற்காசியா குறித்த பாடப்பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் என்ற அந்த மாகாண கல்வித் துறையின் திட்டத்துக்கு அங்குள்ள ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாடப்புத்தகத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தேசத் திட்டத்தை எதிர்த்து ஹிந்துக்கள் போராடியதை அடுத்து, இந்தியா தொடர்பான பாடப்பிரிவுகளை மாற்ற வேண்டாம் என கலிஃபோர்னியா கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பில் ஹோனிக் தலைமையிலான பாடப்பிரிவுகள் தொடர்பான குழு, இந்தியா தொடர்பான பாடப்பிரிவுகளை நீக்கும் ஆலோசனையை ரத்து செய்தது. அதே வேளையில், தெற்காசிய தொடர்பான பாடப்பிரிவுகளை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்தது.
இந்தக் குழுவின் புதிய பரிந்துரைகள் கல்வித் துறையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனினும், பிராமணரல்லாத துறவிகளான வியாசர் மற்றும் வால்மீகி ஆகியோரின் பங்களிப்புகள், ஜாதியோடு ஹிந்து மதத்தைத் தொடர்புபடுத்துவது போன்றவை தொடர்பாக இடம்பெற்றுள்ள பாடப்பிரிவுகளை நீக்குவதற்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.