செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கமலின் சாதனைக்கு பிரான்ஸ் நாட்டின் விருதுகமலின் சாதனைக்கு பிரான்ஸ் நாட்டின் விருது

கமலின் சாதனைக்கு பிரான்ஸ் நாட்டின் விருதுகமலின் சாதனைக்கு பிரான்ஸ் நாட்டின் விருது

1 minutes read

கமலின் நடிப்புக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாது, திரைத்துறையை சேர்ந்த பல துறைகளிலும் இவரது பங்களிப்பை செலுத்தி வருகிறார். இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இந்திய சினிமாவை உலகளவில் இடம் பெற செய்தவர்களில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

இந்நிலையில் இந்திய சினிமாவுக்கு கமல் செய்த பெரும் பங்களிப்பிற்காக பிரான்ஸ் நாடு ஹென்றி லாங்லாய்ஸ் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

விருது குறித்து கமல் கூறும் போது, ‘பாரிஸில் ஹென்றி லாங்லாய்ஸ் விருதைப் பெற்றுள்ளேன். இந்த விருதை நான் பெறும்போது என் குரு அனந்து சார் இருந்திருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். காரணம் அவர்தான் ஹென்றி லாங்லாய்ஸ் என்ற பெயரையே எனக்கு தெரியப்படுத்தியவர்” என்று கூறினார்.

ஹென்றி லாங்லாய்ஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டின் பிரபலமான சினிமா வரலாற்று ஆசிரியர். மேலும் இவர் ஒரு திரைப்பட ஆவணத் தொகுப்பாளரும் கூட. இவர் 1977ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். எனவே அவரது பெயரில் சினிமா சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.