செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவி நீக்கக் கோரும் மனு ஏற்புபிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவி நீக்கக் கோரும் மனு ஏற்பு

பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவி நீக்கக் கோரும் மனு ஏற்புபிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவி நீக்கக் கோரும் மனு ஏற்பு

1 minutes read

“பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பண மோசடியில் ஈடுபட்டதும், சொத்துகளை மறைத்ததும் பனாமா ஆவணங்கள் மூலம் தெரிய வந்ததால் அவரை பதவியிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை லாகூர் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றது.

உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பனாமா ஆவணங்களில், நவாஸ் ஷெரீஃப் மகனுக்காக இரு வெளிநாட்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, அதில் முதலீடுகள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனை நவாஸின் மகன் ஹுசேன் நவாஸ் ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில் கோஹர் நவாஸ் சிந்து என்பவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பனாமா ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி, வெளிநாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டதை நவாஸ் ஷெரீஃபின் மகன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து பிரதமராகத் தொடரும் தகுதியை நவாஸ் இழந்துவிட்டார்.

1993 மற்றும் 1994-ஆம் ஆண்டுகளில் அந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டபோது நவாஸின் மகன் சட்டப்பூர்வ வயதை எட்டியிருக்கவில்லை.

எனினும், தேர்தல் ஆணையத்திடம் காட்டிய சொத்துக் கணக்கில் அந்த நிறுவனங்கள் குறித்த உண்மையை நவாஸ் ஷெரீஃப் மறைத்துவிட்டார்.

நவாஸ் ஷெரீஃப் பண மோசடியில் ஈடுபட்டதாக நிதியமைச்சர் இஷாக் தர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தனது சொத்துகளை நவாஸ் ஷெரீஃப் வேண்டுமென்றே மறைத்துள்ளதும் நிரூபணமாகியுள்ளது.

இந்தத் தவறுகளைச் செய்தவர்கள் எந்த அரசுப் பொறுப்பையும் வகிக்க முடியாது.

அந்த வகையில், பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃபை நீக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.