இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் இந்தியா மற்றும் பூட்டான் நாட்டிற்கு 7 நாட்கள்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதில் முதல் நால்ளான் நேற்று முன்தினம் இந்தியா சென்றுள்ள இவர்கள் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த பின்னர், மும்பையில் உள்ளஇன்கோனில் ரெகரேஷன் விளையாட்டு மைதானத்தில், அரசு சாரா அமைப்பினரால் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுகளில் கலந்துகொண்டார்.
ஆயிரக்கணக்கான பள்ளி சிறுவர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் இதில் கலந்துகொண்டார். இதில், சச்சின் தெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய இளவரசி கேட் மிடில்டன் சிக்சர் அடித்து அசத்தியுள்ளார்.
விளையாட்டு மைதானத்தில் மிக உற்சாகமாகதுள்ளிக்குதித்த கேட்டின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. நேற்று நடிகர் நடிகைகள் ஷாருகான்,ரிஷி கபூர்அவரது மனைவி நீது, பிரனிதி சோப்ரா,ஐஸ்வர்யாராய் பச்சன்,மாதுரிதீட்ஷித்,இயக்குனர் கரண் ஜோக்கர்,பர்கான் அக்தர்,ஷில்பா ஷெட்டி,அலியாபட், ஜாக்குலின் பெர்ணாண்டஸ்,சோனம் கபூர், சச்சின் தெண்டுல்கர், சங்கர் மகாதேவன்,உள்பட இரவு, பாலிவுட் பாடகர்கள்,நடன கலைஞர்கள் அளிக்கவிருக்கும் விருந்தில் கலந்து கொண்டனர்..