0
செங்கடலில் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான டிரான், சனாபிர் ஆகிய இரு தீவுகளும், கடந்த 60 ஆண்டுகளாக எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இத்தீவுகள் சம்பந்தமாக சவுதிக்கும், எகிப்துக்கும் இடையே சர்ச்சை நிலவி வந்தது. இந்நிலையில் இருநாட்டு உறவையும் மேம்படுத்தும் வகையில், இரு தீவுகளையும் சவுதி அரேபியாவிடம் ஒப்படைக்க உள்ளதாக எகிப்து அறிவித்துள்ளது. இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.