செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இங்கிலாந்தில் 18 வயது இளைஞர்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகையில் முக்கிய மாற்றம்!

இங்கிலாந்தில் 18 வயது இளைஞர்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகையில் முக்கிய மாற்றம்!

1 minutes read

இங்கிலாந்தில் 18 வயதுடைய இளைஞர்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொருளாதார ரீதியாகப் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17 வயதுடையவர்கள் தங்களின் 18ஆவது பிறந்தநாளுக்கு முந்தைய நாள் வரை ’16-17 சேவர் ரயில் கார்டை’ (16-17 Saver Railcard) வாங்கிக் கொள்ளலாம். இதன்மூலம், அவர்கள் தங்களுக்கு 19 வயது ஆகும் வரை ரயில்களில் 50 சதவீதக் கட்டணச் சலுகையைப் பெற முடியும்.

இதற்கு முந்தைய விதிமுறைகளால், ஒரே கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களில் 18 வயதை எட்டியவர்கள், ஏனைய மாணவர்களை விட சராசரியாக £175 வரை கூடுதலாகச் செலவு செய்ய வேண்டியிருந்தது. இந்த மாற்றத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 70,000 மாணவர்கள் பயனடைவார்கள் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

ரயில்வே துறை அமைச்சர் லார்ட் ஹெண்டி (Lord Hendy) இந்த முடிவை வரவேற்றுள்ளார். இது பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஒரு “பொது அறிவு சார்ந்த மாற்றம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரயில் கார்டின் விலை ஆண்டுக்கு £35 ஆகும். இது பெரும்பாலான ரயில் பயணக் கட்டணங்களில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.

ஏற்கெனவே 18 வயதுடையவர்களுக்கு ’16-25 ரயில் கார்டு’ வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதன்மூலம் பயணக் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தள்ளுபடி கிடைத்து வந்தது.

இத்துடன், இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு முதல் பெரும்பாலான ஒற்றை வழி பஸ் பயணக் கட்டணங்களுக்கான உச்சவரம்பு £3 இருந்து £2ஆகக் குறைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.