செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எகிப்தில் பயணிகள் வாகனம் மீது ரயில் மோதி 8 பேர் பலிஎகிப்தில் பயணிகள் வாகனம் மீது ரயில் மோதி 8 பேர் பலி

எகிப்தில் பயணிகள் வாகனம் மீது ரயில் மோதி 8 பேர் பலிஎகிப்தில் பயணிகள் வாகனம் மீது ரயில் மோதி 8 பேர் பலி

0 minutes read

எகிப்தில் சனிக்கிழமை பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து எகிப்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காலித் மெகஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அஸ்வன் நகரிலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட ரயில் கெய்ரோ நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக அந்த ரயில் மோதியது.
இதில், வாகனத்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். அதில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவம் நடந்த இடத்துக்கு 8 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.