இந்தியாவுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான இன்றைய தேநீர் இடைவேளையின்போது இலங்கை 8 விக்கெட்களை இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய இலங்கை 170 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.
இந்தத் தொடர் முழுவதும் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிவரும் சொனால் தினூஷ 98 ஓட்டங்களுடன் ஆட்டம இழக்காதுள்ளார். அவருக்கு பக்கபலமாக இருக்கும் லஹிரு குமார 56 பந்துகளை எதிர்கொண்டு 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.
எண்ணிக்கை சுருக்கம்
இந்தியா 1ஆவது இன்: 503 – 9 விக். டிக்ளயார்ட் (தேவ்தூத் படிக்கல் 117, த்ருவ் ஜுரெல் 115 ஆ.இ., ரிஷாப் பான்ட் 63, ஷுப்மான் கில் 50, அசித்த பெர்னாண்டோ 106 – 4 விக்., ப்ரபாத் ஜயசூரிய 132 – 2 விக்,, கேஷர நுவன்த 154 – 2 விக்.)
இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 290 (சொனால் தினூஷ 103, பசிந்து சூரியபண்டார 80, கமிந்து மெண்டிஸ் 32, ப்ராசித் கிரிஷ்ணா 52 – 3 விக்., மானவ் சுதார் 85 – 3 விக், சரன்ஷ் ஜெய்ன் 69 – 2 விக்.)
இலங்கை (ஃபலோ ஒன்) 2ஆவது இன்: 5ஆம் நாள் தேநீர் இடைவேளையின்போது 383- 6 விக். (பசிந்து சூரியபண்டார 93, கமிந்து மெண்டிஸ் 55, சொனால் தினூஷ 98 ஆ.இ., கேஷர நுவன்த 46 ஆ.இ., கமில் மிஷார 32, தனஞ்சய டி சில்வா 23, மானவ் சுதார் 105 – 3 விக்.)