அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 96.28 டொலராகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 91.48 டொலராகவும் உயர்ந்துள்ளன.
சந்தை நிலவரப்படி பிரென்ட் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 76 சென்ட்கள் அல்லது 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேவேளை, அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை 18 சென்ட்கள் அல்லது 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பு வாரத்தில் ஒட்டுமொத்தமாக பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 7.6 சதவீதமும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 10 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன. இந்த விலை உயர்வானது, கடந்த ஜூலை மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு பதிவான மிக வலுவான வாராந்திர உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.